10/10/08

வள்ளுவமும் வாலிபமும்..

பொதுவா வள்ளுவர், குரள்னா நம்மாளு தெரிச்சு ஓடி போறாங்க.. வாழ்க்கைக்கு எல்லா நேரத்திலும், எல்லா பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் ஒரே நூல் திருக்குறள் தான்.. இன்றைய திரைப்பட பாடல்கள் சில வகை வள்ளுவரிடம் இருந்து எப்படி (Drive) வருவிக்கப்பட்டது என்பதை பார்ப்போம்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். (குறள்-1116)


இது குறள்- இதுக்கு விளக்கம் தபு சங்கர் ஸ்டைலில்..
• இரவில் குளத்தருகே
மட்டும் போகாதே...
என்ன இரண்டு நிலாக்கள்
ஒரு சேர நகர்கிறதே..,
என்று
குளத்து மீன்கள்
குளம்புகின்றன...!

இதை தான் சிவகாமி என்ற படத்தில் கவிஞர் கா.மு.ஷெரிப் எழுதும் போது..

•வானில் முழு மதியை கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்
வானமுழு மதியை போலே
மங்கை அவள் வதனம் கண்டேன்...!



இதேபோல் குறள் ஒன் ஒன் டபுள் ஜீரோ (என்ன பண்றது இப்படி கமர்சியலா சொன்னாலாவது படிப்பீங்கன்னுதான்..)

“கண்ணொடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல ” (குறள்-1100)


விளக்கம்
• கண்கள்
நான்கும் பேசிவிட்டால்
உதடுகளும் கூட
பிரிய தேவையில்லை....

இதை தான் கண்ணதாசனும்
• பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா.. என்பார்.

குறள் டபுள் ஒன் டபுள் டூ..

”உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு”. (குறள்-1122)


விளக்கம்:
• நான் உடல்
நீ என் உயிர்..
நீ இருக்கும் வரைதான் மனிதன்
நீ பிரிந்தால் பிணம்..

மேலே சொன்ன இரண்டு குறளையும் சேர்த்த சமீபத்திய பாடல்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகைவேனே மாற்றி
.
.
.
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்ல
இனி இந்த உனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோட வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

வலை விரியும்