8/17/08

பாரதியின் வாழ்க்கைச் சம்பவம்.



வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்று வாழாத பாரதிக்கு ஒருமுறை செட்டியார் ஒருவர் ஒரு ராஜ அங்கவஸ்தரமும், சீமை மேலங்கி (கோட்டும்) வாங்கி கொடுத்தார்.. அதை கொடுத்து ”பாரதி இது உங்களுக்காக நான் விஷேசமாக வாங்கி வந்தது..நீங்கள் அதை போட்டு வர வேண்டும்” என்றார். பாரதி அதை அணிந்து கொண்டு எப்போதும் போல கம்பீரமாக தெருவில் நடந்து செல்கிறார். அப்போது அங்கே வரும் ரிக்சா தொழிலாளி “ என்னா சாமி கோட்டு புதுசா..” என்று கேட்க, பாரதி அவனை பார்த்து “ வாடா பாண்டியா.. (அவர் எல்லோரையும் இப்படி அழைப்பது வழக்கம்..அதாவது எல்லோரும் பாண்டிய மன்னர்கள்..) இந்தா மேலாடையை நீயே வைத்துக்கொள்..” என்று கொடுத்துவிட்டார். வாங்கித் தந்த செட்டியாருக்கு ஏக கடுப்பு..” என்ன பாரதி இப்படி பண்ணிவிட்டீரே..:”என்றதுக்கு..பாரதி “எனக்கு தர நீவீர் உள்ளீர்.. அவனுக்கு தர என்னை விட்டால் யார் இருக்கிறார்..” என்றார்..

வாங்கி தருவது யாசகப் பொருளாக இருந்தாலும் அதை கொடுக்கும் போது யாசகம் வாங்குபவனைக் கூட மன்னனாய் பார்க்கும் பார்வை என் பாரதியை தவிர வேரு யாருக்கு வரும்...



வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?
:
:
அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.
:
:
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.


8/14/08

நமிதாவின் சுதந்திர தின வாழ்த்து



Hi மச்சான்ஸ்... எல்லாத்துக்கும் ஹாப்பி இண்டீஃபெண்டண்ஸ் டே....



Hi… Everybody... Wishing you happy Independence Day celebration... by bye




Hi எந்த மக்கள் எல்லாத்துக்கும் happy Independence Day.. எனக்க்கூ சிம்புடிருந்து கிடைச்ச மாறி உங்காளூக்கூம் சுதந்திரம்ம் கிடைக்க வாழ்த்தூக்க்காள்...


என்ன பார்க்கறீங்க எல்லா அலைவரியிலும் இவங்க வந்து வாழ்த்துக்கள் சொல்லும் போது...ஏன் எங்க பதிவுகளில் வரக்கூடாதா...


சுதந்திர இந்தியா வாழ்க.....


இதை கேட்பது இந்தியா மட்டை பந்தில் ஜெயிக்கும் போதும், சுதந்திர தின விழாவின் போதும்..குடியரசு தினத்தின் போதும். இப்படிதான் பல இடங்களில் நாம் நமது தேச பக்தியைக் காட்டுகிறோம்.

இருந்தாலும்

நான் ஒரு இந்திய குடிமகன், அணு சக்தி ஒப்பந்தத்தில் என்ன சாரம் உள்ளது என்று எனக்கு தெரியாது..ஆனால் என் சார்பில் பிரதமர் கையெழுத்து இட உள்ளார். நாளை என் சந்ததியே இதன் விளைவுகளை சந்திக்கும்... இதெல்லாம் தெரிந்தும் ஜெய் ஹிந்த் சொல்ல நான் ஒரு சுதந்திர நாட்டில் தானே வசிக்க வேண்டும்.


வேலையில் சாதனை படைத்து இறந்தாள் என்று மேலை நாடு சென்று அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்தவளுக்கு இங்கே பாராட்டு அவள் பெயரில் பட்டயம், ஆனால் இங்கே பாபா விலும், ஸ்ரீ ஹரி கோட்டாவிலும் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கூட இல்லை..



இதெல்லாம் விட லஞ்சம், கைக் கூலித்தனம்.. மக்கள் மட்டும் அல்ல மக்கள் பிரதி நிதிகளும். எல்லோருக்கும் பணம் என்பது தான் முதல் நிலை.. இப்படி நாட்டின் நிலை இருக்க.. 2020 என்ற இலக்கை ஒருவர் சொல்கிறார், இந்த நாட்டில் இருந்து கொண்டே மற்ற நாடுகளுக்காக உழைக்கும் என் இளைஞரைப் பார்த்து..



இந்திய வரலாற்றைப் பாருங்கள், வந்தவர்கள் அனைவரும் இந்தியாவை வென்றார்கள்.(மதனின் வந்தார்கள்,வென்றார்கள்....)இதற்கு ஒரே காரணம் நம்முடைய தேசப்பற்றுதான். ஒரு சாரர் முறையாகவோ, வன்முறையாகவோ வந்தவர்களை எதிர்க்க, இவர்களை ஒருசாரர் காட்டிக் கொடுத்து கூலி வாங்க, பல குடும்பங்கள் சாக, தளபதிகள் நோக, கொள்கைகள் வேக, இதெல்லாம் போக முடிவில் எல்லோருக்கும் விடுதலை. பிறகு அடுத்த ஆள் உள்ளே நுழைய..( p.வாசு style REPEATU)

இது தான் உண்மையான இந்தியா இடையில் வந்த காந்தி, நேரு, பாரதி , வ.வு.சி.,காமராஜ் போன்றோர்கள் லேசாக அதன் நிறத்தை மாற்றினார்கள், ஆனால் பயனில்லை மறுபடியும் பழைய நிறத்திற்க்கு வந்தாச்சு...

இப்போதைய இந்தியர்களின் தேசிய கீதம் பணம், தேசிய சின்னம் பணம், தேசிய மொழி பணம், தேசிய ஒற்றுமை பணம்...அதற்க்காக எந்த ஒப்பந்தமும் போடுவோம், கூட்டணி மாற்றுவோம், விளையாடி ஜெயிப்போம், பின்பு தோற்ப்போம், வெளிநாடுகளில் குடிபெயர்வோம், வெளி நாடுகளுக்கு அடிமையாகி உழைப்போம்..


சரி..சரி.. வம்பெதற்க்கு இப்படியே சொன்னா என்னை தேச துரோகின்னு சொல்லிடுவீங்க..அதனால நானும் சொல்லி வைக்கிறேன்..



.........ஜெய் ஹிந்த்... பாரத மாதா வாழ்க......................................

சித்தன் சவுண்டு சர்விஸிலிருந்து...(காமெடி)





சித்தன் சவுண்டு
சர்விஸிலிருந்து....






இந்த ஊருக்கு தெரிவிச்சுக்கற மொத காமெடி என்னான்னா..



டீச்சர் : உங்க படிப்பு மேலே யாருக்கு அக்கரை அதிகம்...
மாணவன் : எங்க ஊர் பஸ் கண்டெக்டருக்கு தான்..
டீச்சர் : எப்படி..
மாணவன் : அவரு தான் தினமும் நீ பாஸா.. நீ பாஸா.. நீ பாஸா..ன்னு
எல்லாத்தையும் கேக்றாரு டீச்சர்.



பின்னூட்டம் 1
OK, அட்டாக் மீ.. நீ எங்கிட்டிருந்து வேணா பால போடு
அதை எப்படி பேஸ் பண்ரனு பாரு...





ஆசிரியை : மாணவர்களே, உங்க பெயர், ஹாபி(hobby) வரிசையா எழுந்து சொல்லுங்க
மாணவன் 1: என் பெயர் குமார், ஹாபி சோபா மேல் தூங்குவது
மாணவன் 2: என் பெயர் கண்ணன், ஹாபி சோபா மேல் தூங்குவது
மாணவன் 3: என் பெயர் சோமு, ஹாபி சோபா மேல் தூங்குவது
ஆசிரியை : என்னப்பா எல்லோருக்கும் ஒரே ஹாபி..சரி girls சொல்லுங்க..

மாணவி : என் பெயர் சோபா.....
ஆசிரியை : சரி..சரி.. உக்காருமா ...இதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டா


பின்னூட்டம் 2
ஹ.ஹ..ஹா..தாமசு...தமாசு...
அடங் கொன்னியா இவனெல்லாம் காமெடி பண்ரா என் ஸ்டைல யாரது கமெண்டு போடுக்கப்பா.





இரண்டு நாய் முதலாளிகள் பேசிக்கறாங்க...

1: என் நாய் super நாய் தெரியுமா.. காலையில பேப்பர் வந்தவுடன் வாங்கிட்டு வந்து என்னக்கு கொடுத்துட்டு
டீ போட்டு கொண்டு வரும்..பின்னாடி தண்ணி காயவைத்து எல்லா வேலையும் செய்யும்..
2: ஆமா.. ஆமா. என் வீட்டு நாயும் அப்படி தான்..



பின்னுட்டம் 3
அடப்பாவி.. அடப்பாவி.. இந்த காமெடிக்கு என் படத்த பின்னூட்டம்
போட்டு எல்லா தாய்மார்களிட்ட அடிவாங்க வச்சுருவ
போல இருக்கேடா..
காமெடிய மாத்து.. காமெடிய மாத்து..











ராசாத்தி ரேடியோஸிலிருந்து வரும்
காமெடி...




தந்தை : என் பயன் ரொம்ப குசும்பு புடிச்சவன், இந்த வயசுலேயே எங்க வீட்டுக்குவர வேலைக்காரிக எல்லாத்தையும் கர்பமாக்கிட்டான்..
வந்தவர் : என்ன 3 வயசு பையனா இப்படி..எப்படி இது....!
தந்தை : அவன் விளையாட்டா என்னோட எல்லா காண்டத்தையும் எடுத்து உசியில ஓட்டை போட்டு வச்சுர்றான்..




பின்னூட்டம் 4
ஏப்பா..சுத்த பத்தமா இருக்குற எங்களபத்தி காமெடி பண்ணலியே..



ஒரு பொண்ணுக்கு எட்டு பிள்ளைங்க.. எட்டுக்கும் ‘பீட்டர்’னு பேரு வைச்சா..
நம்மாளு ” என்னமா கூப்பிடும் போது குழப்பம் வராதா”, என்று கேட்க..
அதெப்படி..எல்லோருக்கும் இனிசியல் வேறதானே..ன்னா..
(இந்த நிலைமை சீக்கிரம் தமிழ் நாடுக்கும் வரும்..என்ன
நான் சொல்றது....)


இது இப்படி இருக்க இங்கே...
காதலன் : கண்ணே.. உனக்காக நான் என் பெத்தவங்களை விட்டுட்டு வந்திருக்கேன்..
காதலி : இதென்ன பிரமாதம்.. உனக்காக நான் என் பெத்த பிள்ளைகளை விட்டுட்டு வந்திருக்கேன் தெருயுமா..



என்னூட்டம்
நெக்ஸ்டு மீட் பண்ணலாம்.. வரட்டா..

8/9/08

கண் தெரியவில்லைனா காசி கண் திறக்கவச்சா அது காசி ஆனந்தன்..

ஈழத்து கவிஞர்.தற்சமயம் இருப்பது சென்னை..
காதல்+ கற்பனைகள்= கவிதைகள் என்று சுழலும் கவிஞர்களுக்கு இவர் ஒரு சாட்டை அடி.. சும்மா சொன்னா நம்ப மாட்டீங்க, உங்களுக்காக இவரது நறுக்குகள்.. சில


அடக்கம்
அடக்கம் செய்யப்படுகிறோம்...
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும

நாற்காலி
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

காலம்
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.

நிலவு
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்
பகலிலும் தலைவர்கள்
குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.
தேடுகிறோம்...
எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

சாமி
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்

மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா...நீ என்றேன்
கைதட்டினான்

திமிர்
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்

குப்பைத்தொட்டி
அலுவலகத்தில் இருக்கிறவனுக்கு
இது குப்பைதொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.

விளம்பரம்.
குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை.....

இவர் எழுதிய படைப்புகள் கொஞ்சம் எனினும், நெஞ்சத்தை சிகப்பாக்கும் கூரிய வரிகள்.. இவரை பதிப்பதில் இந்த பதிவு பெருமை கொள்கிறது...

8/8/08

இன்றைய கல்வியியல் நிலை..

சென்ற வாரம் எங்கள் ஊரில் உள்ள அனைத்து புத்தக கடைகளிலும் கூட்டம்.. பேனா வாங்க போன நான் பேய் அடித்து வந்த காதை இது..

அட்டை(chat) படம் தயாரிக்க வேண்டி படங்கள் உள்ள வண்ண தாள்களை வாங்க அனைவரும் நின்று கொண்டு இருந்தனர். இதில் ஒருவர் “ ஏன்பா எனக்கு புதுசா யாருக்கும் கொடுக்காத ஒரு பிக்சர் ஷீட் கொடு.. அப்ப தான் மத்தவங்கள விட அதிக மார்க் வாங்க முடியும்..”
நான் நினைத்தேன்...”சரி ஏதோ B.ED, M.ED படிப்பாங்க போல.. தேர்வு நேரம் போலன்னு..”
அவுங்க கிட்ட என் சந்தேகத்தை கேட்டேன்..
அதுக்கு ” எல்லா என் பையனுக்கு தான் வாங்கறேன்...”
பையன் எத்தனாவது படிக்கிறான் என்றதுக்கு..
” இப்ப தான் Pre K.G சேத்தியிருக்கேன்..” இந்த பதில் கேட்டு அப்படியே நான் shock ஆயிட்டேன்(வடிவேலு மாதிரி)..அப்பவே முடிவு பண்ணிட்டேன் blog எழுத நல்ல விசியம் சிக்கியாச்சு......
(நம்ம குசும்பன் சொன்ன மாதிரி...)

Pre K.G என்ற மழலையர் கல்வி இப்போது தாய் மார்களிடம் வெகு பிரபலயம் அடைந்துள்ளது..இது ஒரு கெளரவம் கூட. இந்த கல்வி முறை சரியாக உள்ளதா என்று பார்த்தால் கிடையாது..
மாண்டிசோரி, சீன கல்விமுறை என்று பல பெயர்கள் சொன்னாலும் அதை செயல்படுத்தும் ஆசிரியர் மன்னிக்கவும் ஆசிரியை வெரும் ஒரே ஒரு பட்டயம் (Bsc,B.Com,B.B.M) பெற்றவர்கள் தான்..ஏன் இன்னும் இவர்கள் கல்வி கற்பித்தல் முறைகள் என்ற பாடத்தை கூட பார்த்ததில்லை.,படித்ததில்லை(B.Ed,M.Ed, வரும் பாடங்கள்)..இது இப்படி இருக்க இவர்கள் தரும் வீட்டுப்பாடம் (Assignment என்ற பெயரில்) பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பால் அவர்களுக்கு சுய சிந்தனை வளர்வதேயில்லை.. (CREATIVE Thought). அதுவும் இது போன்ற படங்கள் ஒட்டுவது பெற்றோர்களுக்கு தரும் வீட்டுப்பாடம் இதனால் பையனுக்கு என்ன பயன் என்று யோசிக்கரார்களா அந்த காட்டன் புடைவையில் வரும் கடலோர கவிதை ரேகாக்கள்.. அந்த வயதில் அவனுக்கு கத்திரி கொண்டு வெட்ட தெரியுமா, ஒட்ட தெரியுமா.. கேட்டால் நாம் ஒட்டி அவர்களுக்கு சொல்லி தரவேண்டுமாம்..இவர்கள் அதை பார்த்து மார்க் போடுவார்களாம்.. அதில் என் பையன் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று பொறாமை வேறு...
இப்படி படிக்கும் மாணவனுக்கு இறுதி வரை அடிமை வாழ்க்கை தான், ஒரு MNC யோ, call center வேலையோ !!!..

தாய்மார்களே சிந்திப்பீர் 5 வயது வரை தான் அந்த குழந்தை சுதந்திரமாக வளரும் உங்களிடம், உங்களினால்., அதன் சுதந்திரத்தை நாகரீக மோகத்தால் நீங்களே கருக்கி, எதிர்கால விஞ்ஞானியை குறைத்து விடாதீர்கள்..இப்போதே Research Scholor நிரம்ப குறைவு இங்கே..