8/9/08

கண் தெரியவில்லைனா காசி கண் திறக்கவச்சா அது காசி ஆனந்தன்..

ஈழத்து கவிஞர்.தற்சமயம் இருப்பது சென்னை..
காதல்+ கற்பனைகள்= கவிதைகள் என்று சுழலும் கவிஞர்களுக்கு இவர் ஒரு சாட்டை அடி.. சும்மா சொன்னா நம்ப மாட்டீங்க, உங்களுக்காக இவரது நறுக்குகள்.. சில


அடக்கம்
அடக்கம் செய்யப்படுகிறோம்...
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும

நாற்காலி
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

காலம்
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.

நிலவு
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்
பகலிலும் தலைவர்கள்
குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.
தேடுகிறோம்...
எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

சாமி
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்

மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா...நீ என்றேன்
கைதட்டினான்

திமிர்
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்

குப்பைத்தொட்டி
அலுவலகத்தில் இருக்கிறவனுக்கு
இது குப்பைதொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.

விளம்பரம்.
குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை.....

இவர் எழுதிய படைப்புகள் கொஞ்சம் எனினும், நெஞ்சத்தை சிகப்பாக்கும் கூரிய வரிகள்.. இவரை பதிப்பதில் இந்த பதிவு பெருமை கொள்கிறது...

2 comments:

ramesh sadasivam said...

கவிதைகள் நன்றாக உள்ளன. விளம்பரம் கவிதை குறிப்பிடதக்கது.

Narayanan M said...

Kovil kavithaikku enathu paaraattukkal! arumai!!