8/14/08

நமிதாவின் சுதந்திர தின வாழ்த்து



Hi மச்சான்ஸ்... எல்லாத்துக்கும் ஹாப்பி இண்டீஃபெண்டண்ஸ் டே....



Hi… Everybody... Wishing you happy Independence Day celebration... by bye




Hi எந்த மக்கள் எல்லாத்துக்கும் happy Independence Day.. எனக்க்கூ சிம்புடிருந்து கிடைச்ச மாறி உங்காளூக்கூம் சுதந்திரம்ம் கிடைக்க வாழ்த்தூக்க்காள்...


என்ன பார்க்கறீங்க எல்லா அலைவரியிலும் இவங்க வந்து வாழ்த்துக்கள் சொல்லும் போது...ஏன் எங்க பதிவுகளில் வரக்கூடாதா...


சுதந்திர இந்தியா வாழ்க.....


இதை கேட்பது இந்தியா மட்டை பந்தில் ஜெயிக்கும் போதும், சுதந்திர தின விழாவின் போதும்..குடியரசு தினத்தின் போதும். இப்படிதான் பல இடங்களில் நாம் நமது தேச பக்தியைக் காட்டுகிறோம்.

இருந்தாலும்

நான் ஒரு இந்திய குடிமகன், அணு சக்தி ஒப்பந்தத்தில் என்ன சாரம் உள்ளது என்று எனக்கு தெரியாது..ஆனால் என் சார்பில் பிரதமர் கையெழுத்து இட உள்ளார். நாளை என் சந்ததியே இதன் விளைவுகளை சந்திக்கும்... இதெல்லாம் தெரிந்தும் ஜெய் ஹிந்த் சொல்ல நான் ஒரு சுதந்திர நாட்டில் தானே வசிக்க வேண்டும்.


வேலையில் சாதனை படைத்து இறந்தாள் என்று மேலை நாடு சென்று அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்தவளுக்கு இங்கே பாராட்டு அவள் பெயரில் பட்டயம், ஆனால் இங்கே பாபா விலும், ஸ்ரீ ஹரி கோட்டாவிலும் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கூட இல்லை..



இதெல்லாம் விட லஞ்சம், கைக் கூலித்தனம்.. மக்கள் மட்டும் அல்ல மக்கள் பிரதி நிதிகளும். எல்லோருக்கும் பணம் என்பது தான் முதல் நிலை.. இப்படி நாட்டின் நிலை இருக்க.. 2020 என்ற இலக்கை ஒருவர் சொல்கிறார், இந்த நாட்டில் இருந்து கொண்டே மற்ற நாடுகளுக்காக உழைக்கும் என் இளைஞரைப் பார்த்து..



இந்திய வரலாற்றைப் பாருங்கள், வந்தவர்கள் அனைவரும் இந்தியாவை வென்றார்கள்.(மதனின் வந்தார்கள்,வென்றார்கள்....)இதற்கு ஒரே காரணம் நம்முடைய தேசப்பற்றுதான். ஒரு சாரர் முறையாகவோ, வன்முறையாகவோ வந்தவர்களை எதிர்க்க, இவர்களை ஒருசாரர் காட்டிக் கொடுத்து கூலி வாங்க, பல குடும்பங்கள் சாக, தளபதிகள் நோக, கொள்கைகள் வேக, இதெல்லாம் போக முடிவில் எல்லோருக்கும் விடுதலை. பிறகு அடுத்த ஆள் உள்ளே நுழைய..( p.வாசு style REPEATU)

இது தான் உண்மையான இந்தியா இடையில் வந்த காந்தி, நேரு, பாரதி , வ.வு.சி.,காமராஜ் போன்றோர்கள் லேசாக அதன் நிறத்தை மாற்றினார்கள், ஆனால் பயனில்லை மறுபடியும் பழைய நிறத்திற்க்கு வந்தாச்சு...

இப்போதைய இந்தியர்களின் தேசிய கீதம் பணம், தேசிய சின்னம் பணம், தேசிய மொழி பணம், தேசிய ஒற்றுமை பணம்...அதற்க்காக எந்த ஒப்பந்தமும் போடுவோம், கூட்டணி மாற்றுவோம், விளையாடி ஜெயிப்போம், பின்பு தோற்ப்போம், வெளிநாடுகளில் குடிபெயர்வோம், வெளி நாடுகளுக்கு அடிமையாகி உழைப்போம்..


சரி..சரி.. வம்பெதற்க்கு இப்படியே சொன்னா என்னை தேச துரோகின்னு சொல்லிடுவீங்க..அதனால நானும் சொல்லி வைக்கிறேன்..



.........ஜெய் ஹிந்த்... பாரத மாதா வாழ்க......................................

6 comments:

பரிசல்காரன் said...

குணா, தம்பி (கிரேசி)கிரி...

இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்!

Natty said...

தல, வாழ்த்துக்கள்....

தப்பா எடுத்துக்காதீங்க.. (அப்ப தப்பா எடுத்துக்குறா மாதிரிதானே எழுதப்போறேன்னு நீங்க கேக்குறது கேக்குது ;) )

அரசியல், அழுக்கு, ஊழல், எல்லாம் இருப்பது நிஜம்.... ஆனா... மகிழ்ச்சி அடையும் படி எதுவுமே இல்லையா என்ன? போக்குவரத்து, கட்டமைப்பு, வேலை வாய்ப்பு எல்லாமே வளர்ந்துதானே இருக்கு.... இத்தனை கோடி மக்களை கொண்டு, எவ்வளவு சாதித்துள்ளோம் என நினைத்து சந்தோஷப்பட்டு ஒரு பதிவு போடுங்களேன்... ப்ளீஸ்,.....

Anonymous said...

//அரசியல், அழுக்கு, ஊழல், எல்லாம் இருப்பது நிஜம்.... ஆனா... மகிழ்ச்சி அடையும் படி எதுவுமே இல்லையா என்ன? போக்குவரத்து, கட்டமைப்பு, வேலை வாய்ப்பு எல்லாமே வளர்ந்துதானே இருக்கு.... இத்தனை கோடி மக்களை கொண்டு, எவ்வளவு சாதித்துள்ளோம் என நினைத்து சந்தோஷப்பட்டு ஒரு பதிவு போடுங்களேன்... ப்ளீஸ்,.....//

வழிமொழிகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.

இதுபோல நெகட்டிவாக எழுத நிறையப் பேர் உள்ளனர். பாசிட்டிவ் ஆக எழுத முயலுங்கள்.

ramesh sadasivam said...

இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்!

மகிழவும் துக்கப்படவும் இன்றைய இந்தியாவில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விடுதலை தினமான இன்று நல்லதை நினைத்து மகிழ்வோம். :) ஜெய் ஹிந்த்.

ராஜ நடராஜன் said...

உங்க பேர் எங்கோ பார்த்தமாதிரி இருக்கே? எப்படியோ சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

தமிழ் பொறுக்கி said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி மலர்கள்.
ஆங்கிலேயர்கள் வந்தபின்பு கூட சுமார் 120 ஆண்டுகள் வரை அடிமையாய் இருந்தது நமக்கு தெரியவில்லை.
காந்தியும், பல சுதந்திர தலைவர்களும், வந்த பின்பு தான் புரட்சி முழுமையாய் எல்லோரையும் சென்றடைந்தது.
இப்போது நாம் அந்த முதல் 50 வருடங்களில் இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தால் போதும். இந்த கட்டுரையே அப்படி ஒரு கொதிப்பை ஏற்படுத்தத்தான்.
அண்ணன் கிரிஷ்ணகுமார். வடகரை வேலன்,natti,ஸ்ரீ ரமேஷ், நடராஜன் தலைமையில் அடுத்த புரட்சி நடக்குமானால் கண்டிப்பாக நாங்கள் இருவரும் தோள் மட்டும் அல்ல, உயிர் கொடுப்போம் இந்த நாட்டுக்காக..
......ஜெய் ஹிந்த்....