9/12/08

.....பென்ஜ்சில் படித்த கவிதைகள்..

பொதுவா பரிட்ச்சை எழுதறதே கொடுமையான விசயம், அதை மேற்பார்வையாளரா பார்க்கறது அதை விட கொடுமையானது.. அதுவும் எங்க என்ஜினியரிங் கல்லுரி மாணவங்க எழுதறத பார்க்கறது கொடுமையோ கொடுமை.. எக்சாம் ஆரம்பித்ததிலிருந்து எழுதாமலே இருப்பான், கடைசி அஞ்சு மணித்துளி மட்டும் வேகமா எழுதுவான்.. (ஏன்னா நாங்க வாங்கிட கூடாதில்ல..) அந்த மூணு மணி நேர ஜெயில் மேற்பார்வையாளர் பணியின் போது, சரி கீழ்பார்வை இட்டுதான் பார்க்கலாம்னு..பென்ஜ்சில பார்த்தா... பல கவிஞர்கள் பிறந்து இருக்கிறது தெரியுது.. அதில் மனதில் நின்ற சில கவிதைகள்...

என்னை மறந்த நீ
உன் வீட்டில் ஹாயாக...
உன்னை மறக்க முடியாமல்
நான் ரோட்டில் நாயாக.....

எண்ணமெல்லாம்
லேடி என்று இருப்பவன்
கண்ணமெல்லாம்
தாடி என்று திரிவான்...

உன்னிடம் ஹாய் சொல்லும்
ஒரு பெண்,
இன்னொருவனுக்கு
bye சொல்லியிருப்பாள்
ஜாக்கிரதை...

காதல் ஒரு
வினோதமான பரிட்சை
அது தேவதைகளுக்கு
பாஸ் மார்க்கும்
தேவதாஸ்களுக்கு
டாஸ்மாக்கும்
பரிசளிக்கிறது..

பெயிண்ட் அடிக்காத சுவரும்
Fair&lovely போடாத ஃபிகரும்
நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை..

உளி கல்லை
உரசினால்
அது சிற்பம்..
நான் உன்னை
உரசினால்
நீ கர்ப்பம்....

6 comments:

பரிசல்காரன் said...

கவுஜ ஜூப்பரு!

பரிசல்காரன் said...

உழி = உளி

கர்பம் = கர்ப்பம்


(ஒரு வேளை நீங்க சரியா சொல்லித்தராததால உங்க மாணவன் தப்பா எழுதீட்டானோ...)

ஆனாலும் இந்தக் கவிதை ரொம்ப ஓவரு!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

Unmaithan iyya,

i remember my college days....

some gyes wrote bad lines also...

but that is also enjoyable moments.

Anonymous said...

லே அவுட் நல்லா இருக்கு

பாஸ்மார்க் - டாஸ்மார்க்

:-))))

தமிழ் பொறுக்கி said...

கருத்து சொன்னமைக்கு நன்றிகள் பல..
சில எழுத்து பிழைகள் உண்மைதான். அது சரி செய்யப்பட்டுள்ளது..

இனி பல முறை ஃப்ரூப் பார்த்தபின் பதிகிறோம்..

லிங்காபுரம் சிவா said...

ஒவ்வொரு கவிதையும் நச்...