7/20/08

ஈரோடு தமிழன்பன்- கவிதை தொகுப்பில் இருந்து..

கவிஞர் திரு.ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை தொகுப்பில் இருந்து

ஈரோடு தமிழன்பன்


பொதுவா கவிதை என்பது
படித்த உடன் ஈர்க்கும்
பின் இறுக்கும்
சிலநாள் சென்றாலும் இருக்கும்
மனதில்..

இவரது கவிதை அதையும் தாண்டியது..ஹைக்கூ, சென்ரியூ, மற்றும் முற்போக்கு கவிதைகளின் தொகுப்பு...(படிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து..அவரவர் எண்ணபடி-தசாவதாரம் மாதிரி )
இதை படித்து உங்களது கருத்தை பின்னுட்டமாக தரும்படி வேண்டுகிறேன்.



மானத்தை என்கிருந்து பூட்டுவது ?
உள்ளே இருந்தா?
வெளியே இருந்தா ?
என்று கேட்டான் மாணவன்
ஆசான் சொன்னார்
பூட்டுவது நீ என்று
நினைத்துக் கொண்டு
எங்கிருந்து பூட்டினாலும் பயனில்லை.


காம்புக்கு வேறென்ன
கவுரவம் வேண்டும்
தாங்கிக் கொண்டிருக்க
ஒரு ரோஜாப்பூ இருந்தால் போதாதா?


ஒரு சிறகைத் தலையில் சூடி
அரசரானார்கள் நம் முன்னோர்கள்
நாமோ
தங்கத்தை மகுடமாய் சூடி
அதற்கு அடிமையானோம். ...!


பாதை போடுவதும் இல்லை
பாதையை அழிப்பதும் இல்லை
பறவைகள் சொன்ன பாடம்...

1 comments:

ramesh sadasivam said...

ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் அனைத்தும் பிரம்மாதம். தங்கள் ரசனைக்கு பாராட்டுக்கள். தந்தமைக்கு நன்றிகள்.