7/20/08

படித்ததில் அழுதது.....

‘‘ஒரே ஒரு ஊருக்குள்ளஒரே ஒரு அம்மா அப்பா!
ஒத்தப் புள்ள பெத்தாங்கடாஅது யாரு... உங்க அப்பா!பொத்திப்பொத்தி வளத்தாங்கபாசத்தை ஊட்டிஎனக்கு வாங்கித் தர்றேன்னாங்கநிலாவக் காட்டி
நடந்து பழகச் சொன்னாங்களேநட வண்டி ஓட்டி
மவராசன் நீதான்னாங்கஅம்பாரியாட்டி
நான் படிக்க நெனச்சதெல்லாம்நீங்க படிக்க வேணும்
என்னுடைய கவலைகளை நீங்கபோக்க வேணும் உங்களப்பெத்தது சந்தோஷம்
நான் உங்களப்பெத்தது சந்தோஷம்!’’
ஏவி.எம்.மில் எடிட்டிங் டேபிள் முன் அமர்ந்திருக்கிறேன். ‘தவமாய் தவமிருந்து...’ படத்தின்பாடல் காட்சியைச் செதுக்கிக்கொண்டு இருக்கிறேன்.ஒரு எளிய குடும்பம்... தீபாவளிக்கும் திருநாளுக்கும்கூட காசு இல்லாமல் கையைப் பிசைகிறஅப்பன். பிள்ளைகளைத் தவிர வேறெதுவும் அறியாத அம்மா. பள்ளிக்கூட ‘டூர்’ போகக் காசுஇல்லை. ஏங்கி ஏங்கி அழும் சின்னவனையும், எதுவும் பேசாமல் நிற்கும் பெரியவனையும்சமாதானப்படுத்த ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அம்மாவும் அப்பாவும் கிராமத்துக்குச்செல்கிற வழியில் கசிகிறது பாடல்...ஊர்க் கண்மாயில் குளிக்கிறார்கள். குலசாமியைக் கும்பிடுகிறார்கள். அட்டைக் கத்திகட்டபொம்மனாக ஆடுகிறார்கள். நொங்கு கீறி ருசிக்கிறார்கள். மரக்கிளையில் ஊஞ்சல் கட்டிஆடுகிறார்கள். தாயின் மாரிலும் தகப்பன் தோளிலுமாக விளையாடுகிறார்கள் பையன்கள்.
‘‘எத்தனை எத்தனை சந்தோஷம்சிங்கத்தைப் பெத்ததில் சந்தோஷம்!’’
எத்தனை எத்தனை முறை அந்தக் காட்சியை ஓட்டிப் பார்த்தாலும் திமுக்கென கண்ணீர்பூத்துவிடுகிறது எனக்கு!இது யாரோ ஒரு அப்பன் ஆத்தா கதை இல்லை. இந்தத் தமிழ் மண்ணில் ஒவ்வொருஅப்பன் ஆத்தா கதையும் இதுதான். பிள்ளைகள் வயிறு நிறைவதைப் பார்த்து, பெற்றவர்கள்மனசு நிறைகிற மண் இது!ஒவ்வொரு தாயும் தகப்பனும் கூடி மகிழ்ந்து ஒரு உயிரை மட்டும் படைப்பதில்லை...உலகத்தையே படைக்கிறார்கள். தாய் சுரக்கிற ஒவ்வொரு துளி தாய்ப்பாலும், கனவுவிதைக்குத் தெளிக்கிற கருணை மழைத்துளி. குடும்பத்தின் ஜீவிதத்துக்கு தகப்பன் சிந்துகிறஒவ்வொரு துளி வியர்வையும், ஒரு புதிய பிருந்தாவனத்துக்கான தியாக மழைத்துளி!

.......சேரன்....

0 comments: